search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டூயல் ஸ்கிரீன் கொண்ட எல்ஜி V20 இந்தியாவில் அறிமுகம்
    X

    டூயல் ஸ்கிரீன் கொண்ட எல்ஜி V20 இந்தியாவில் அறிமுகம்

    செப்டம்பர் மாதம் மற்ற நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி V20 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியாகியுள்ளது.
    இந்தியாவில் எல்ஜி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமேசான் இணையத்தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் எல்ஜி V20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.54,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    எல்ஜி V20 ஸ்மார்ட்போனுடன் ரூ.18,000/- மதிப்புடைய B&O பிளே ஹெட்செட் ஒன்றும் வழங்கப்படுகிறது. எல்ஜி V20 ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு எக்சேஞ்ச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்வு செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.20,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எல்ஜி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனுடன் SF கோட்டிங் செய்யப்பட்ட பேக் கவர் ஒன்றையும் வழங்குகிறது. 

    சிறப்பம்சங்களை பொருத்த வரை எல்ஜி V20 ஸ்மார்ட்போனின் குறிப்பிடத்தக்க அம்சங்களாக டூயல் ஸ்கிரீன் மற்றும் டூயல் பிரைமரி கேமரா செட்டப் இருக்கின்றன. இதோடு 32-பிட் Hi-Fi குவாட் DAC, எச்டி-ஆடியோ ரெக்கார்டர் மற்றும் B&O ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இதோடு ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு வெளியான முதல் ஸ்மார்ட்போனும் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

    புதிய எல்ஜி V20 ஸ்மார்ட்போன் ஆனது AL6013 மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளது. இதோடு இந்த ஸ்மார்ட்போன் நான்கு அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தாலும் எதுவும் ஆகாது என எல்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது. எல்ஜி நிறுவனம் 64 GB இன்டர்னல் மெமரியும் மெமரியை கூடுதலாக 2டிபி (2000 GB) வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கியுள்ளது. 

    எல்ஜி V20 ஸ்மார்ட்போனில் 5.7 இன்ச் QHD ஐபிஎஸ் குவான்டம் டிஸ்ப்ளேயும், இரண்டாவது டிஸ்ப்ளே எல்ஜி V10 போன்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 SoC சிப்செட் மற்றும் 4 GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. கேமராவை பொருத்த வரை 16 எம்பி, 8 எம்பி என இரு பிரைமரி கேமராக்கள் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 

    எல்ஜி V20 ஸ்மார்ட்போன் 3200 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G எல்டிஇ, வை-பை, GPS, ப்ளூடூத், NFC மற்றும் ஒடிஜி வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×