search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரண்டே நாளில் இருபது லட்சம் பேர் டவுன்லோடு செய்த ஆப்
    X

    இரண்டே நாளில் இருபது லட்சம் பேர் டவுன்லோடு செய்த ஆப்

    இந்தியாவில் ஆன்லைன் ரீசார்ஜ் சேவை வழங்கும் மொபிக்விக் செயலியின் லைட் வெர்ஷன் வெளியான இரண்டு நாட்களில் இருபது லட்சத்திற்கும் அதிகமாமனோர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.
    இந்தியாவில் ஆன்லைன் ரீசார்ஜ் சேவைகளை வழங்கும் மொபிக்விக் செயலியின் லைட் வெர்ஷன் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதன்படி இந்த ஆப் வெளியான இரண்டே நாட்களில் சுமார் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்திருக்கின்றனர்.  

    மொபைல் வேலெட் பிளேயரில் கிடைக்கும் மொபிக்விக் லைட் ஆப் வெறும் 1 எம்பி அளவு மட்டுமே இருக்கிறது. 2ஜி நெட்வொர்க்களில் சிறப்பாக வேலை செய்யும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆப் வெளியான 2 நாட்களில் கிட்டத்தட்ட 20 லட்சத்திற்கும் அதிகமானோர் டவுன்லோடு செய்து இருப்பதாக மொபிக்விக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில் மொபைல் வேலெட் சேவைகளை வழங்கும் பேடிஎம், மொபிக்விக் மற்றும் ஃப்ரீசார்ஜ் சேவைகளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்திருக்கிறது. மற்ற செயலிகளின் மெமரி அளவு அதிகம் என்பதால் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன்களில் மட்டுமே நன்கு வேலை செய்யும்.

    இதனை கருத்தில் கொண்டு மொபிக்விக் லைட் ஆப் வெளியிடப்பட்டுள்ளது. மொபிக்விக் லைட் செயலியில் பண பிரமாற்றங்களை UPI மற்றும் வேலெட்களில் இருந்து பெற முடியும். மேலும் வங்கி சார்ந்த பரிமாற்றங்களும் மார்ச் 31, 2017 வரை மொபிக்விக் லைட் செயலியில் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதன்மையாக ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்த செயலியை பயன்படுத்த முடியும். வாடிக்கையாளர்கள் தங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் இருந்து 80971-80971 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்தும் இந்த செயலியை டவுன்லோடு செய்ய முடியும். இந்த வழிமுறை மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களும், கூகுள் பிளே அக்கவுண்ட் இல்லாதவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். 
    Next Story
    ×