search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியா-கத்தார் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின
    X

    இந்தியா-கத்தார் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின

    இந்தியா மற்றும் கத்தார் நாடுகளுக்கு இடையே இன்று பல்வேறு புதிய ஒப்பந்தங்களில் பிரதமர் மோடியும் கத்தார் பிரதமரும் கையொப்பமிட்டனர்.
    புதுடெல்லி:

    கத்தார் பிரதமர் ஷேக் அப்துல்லா பின் நாஸர் அல் கலிபா அல் தானி டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    கருப்புப் பணப் பதுக்கல் மற்றும் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

    டெல்லி ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு பின்னர், இருநாடுகளுக்கு இடையில் சைபர் அலைவரிசை, தொழில் முதலீடு, துறைமுக மேலாண்மை நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கும் இந்த ஆலோசனையின்போது பிரதமருடன் இருந்தார்.
    Next Story
    ×