search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4600 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: இந்திய நிறுவனம் அசத்தல்
    X

    4600 ரூபாய்க்கு 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: இந்திய நிறுவனம் அசத்தல்

    இந்தியாவில் குறைந்த விலையில் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான இன்டெக்ஸ், மலிவு விலையில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. சில தினங்களுக்கு முன் இன்டெக்ஸ் நிறுவனம் ‘அக்வா இ4’ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்சமயம் இன்டெக்ஸ் அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போனுக்கு அக்வா கிளாசிக் 2 என பெயரிடப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.0 இன்ச் FWVGA டிஸ்ப்ளே, 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 GB வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டுள்ளது.

    கேமராவை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, ஆட்டோஃபோகஸ், டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போனை சக்தியூட்ட 2200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி LTE, GPRS/EDGE, 3G, A-GPS, ப்ளூடூத், வை-பை b/g/n மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. புதிய இன்டெக்ஸ் அக்வா கிளாசிக் 2 இந்தியாவில் ரூ.4,600 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
    Next Story
    ×