search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் விநியோகிப்பதில் பாரபட்சம்: மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்
    X

    பணம் விநியோகிப்பதில் பாரபட்சம்: மத்திய அரசு மீது மம்தா பாய்ச்சல்

    புதிய ரூபாய் நோட்டும் வழங்கும் பணிகளில் மேற்கு வங்காளம் உள்ளிட்ட சில மாநில அரசுகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.
    கொல்கத்தா:

    ரூபாய் தாள்கள் விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட முடிவை  மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில், ரூபாய் தாள்கள் விநியோகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றம் சாட்டி மம்தா பானர்ஜி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ரூ.500,100 மற்றும் சிறிய மதிப்பு கொண்ட ரூபாய் தாள்கள்  பெங்கால் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் பார்க்க முடியவில்லை. அவைகள் மிகவும் அரிதான வர்த்தக பொருளாக மாறிவிட்டது. எனவே இந்த மாநிலங்கள் பெறும் வகையில் ரிசர்வ் வங்கி அனைத்து மதிப்பிலான பணத்தையும் விநியோகிக்க வேண்டும்.

    பணம் வழங்குதலில் மாநிலங்களுக்கு இடையே முழுமையான பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்த எண்ணிக்கை கண்டிப்பாக வெளியிட வேண்டும். முற்றிலும் ஒரு தலைபட்சமானது. திட்டமிடப்படாமல் அனைத்தும் நடைபெறுகிறது. சம்பளம் பெறுபவர்கள் தங்கள் சொந்த பணத்தையே வங்கிகளில் இருந்து பெற முடியாமல் உள்ளனர். அமைப்பு ரீதியிலான பணியாளர்களுக்கு மிக தீவிரமான பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர்.

    அமைப்பு சாரா பணியாளர்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். ரிசர்வ் வங்கி கூட சில மாநிலங்களுக்கு அவசியம் தேவையான நிதிகளை வாக்குறுதி அளித்தபடி வழங்கவில்லை”

    இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×