search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவில் விரைவில் வெளியாகும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன்
    X

    இந்தியாவில் விரைவில் வெளியாகும் 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட் போன்

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும் துவக்க பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
    புதுடெல்லி:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான நுபியா தனது புதிய ஸ்மார்ட்போனை இந்தியாவில் வெளியிடும் துவக்க பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் 14 ஆம் தேதி நடைபெற இருக்கும் நுபியா வெளியீட்டு விழாவிற்கான அழைப்புகள் வெளியிடப்பட்டு விட்டன.

    டிசம்பர் 14 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள நுபியா ஸ்மார்ட்போன் என்1 (N1) என அழைக்கப்பட இருக்கிறது. தற்சமயம் வரை கிடைத்திருக்கும் தகவல்களில் புதிய நுபியா என்1 ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு..

    புதிய நுபியா என்1 ஸ்மார்ட்போனில் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P10 SoC பிராசஸர், 13 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமரா கொண்டிருக்கும். இத்துடன் இந்த கருவியானது 5000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் நுபியா ஸ்மார்ட்போனில் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷனுடன் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, மற்றும் ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்கும். இத்துடன் 3 ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி வோல்ட்இ சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், வை-பை, 3ஜி, 4ஜி, மற்றும் இதர சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
    Next Story
    ×