search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்விழா ஆண்டு கொண்டாடும் அரியானாவிற்கு மோடி பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    பொன்விழா ஆண்டு கொண்டாடும் அரியானாவிற்கு மோடி பயணம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    50-ம் ஆண்டு பொன்விழா இன்று கொண்டாடும் அரியானா மாநிலத்திற்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார். மோடியின் வருகையொட்டி அரியானா மாநிலத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் செய்யப்பட்டுள்ளது.
    புதுடில்லி:

    அரியானா மாநிலம் உருவானதன் 50-ம் ஆண்டு தினத்தையொட்டி இன்று மாநில அரசின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று அரியானா மாநிலம் செல்கிறார். மேலும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

    அப்போது அரியானாவில் படித்து வேலையில்லாத 30 ஆயிரம் முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ. 9 ஆயிரம் கோடி மதிப்பில் புதிய திட்டம், ‛சுவர்ண ஜெயந்தி’ எனப்படும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார்.

    அரியானாவில் பா.ஜ.க. தலைமையிலான மனோகர்லால் கட்டார் ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி அரியானாவை சேர்ந்து சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் நகர் செல்கிறார்.

    இங்கும் சவுர் சுஜலா யோஜனா திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் அவர் தொடங்கி வைக்கிறார்.

    மோடியின் இந்த பயணத்தையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. அதேபோல் போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×