search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாவின் முதல் பெண் முதலமைச்சர் சசிகலா ககோத்கர் காலமானார்
    X

    கோவாவின் முதல் பெண் முதலமைச்சர் சசிகலா ககோத்கர் காலமானார்

    கோவா மாநில முன்னாள் முதல்வரும், மகாராஷ்டிரவாடி கோமண்டக் கட்சியின் முக்கிய தலைவருமான சசிகலா ககோட்கர் இன்று காலமானார்.
    பனாஜி:

    கோவா மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையைப் பெற்றவர் சசிகலா ககோத்கர். கோவாவின் முதல் முதலமைச்சர் தயானந்த பண்டோத்கரின் மகள். தயானந்த பண்டோத்கர் 1973-ம் ஆண்டு மரணம் அடைந்தபிறகு சசிகலா ககோத்கர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். 1979 ஏப்ரல் மாதம் வரையில் முதல்வர் பதவியில் நீடித்தார்.

    அவர் 90-களில் கல்வியமைச்சராக இருந்தபோது, ஆரம்பக் கல்வித் திட்டத்தில் ஆங்கிலம் பயன்படுத்துவதை தவிர்த்து மராத்தி மொழியை பிராந்திய மொழியாக கொண்டுவர காரணமாக இருந்தார். தற்போது ஆங்கில வழி பள்ளிகளுக்கு அனுமதி அளிப்பதை எதிர்த்து போராடி வரும் பாரதிய பாஷா சுரக்ஷா மஞ்ச் அமைப்பின் தலைவராக இருந்தார்.

    81 வயதான சசிகலா ககோத்கர், கடந்த சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் லட்சுமிகாந்த் பர்சேகர் மற்றும் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நாளை இறுதிச்சடங்கு நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
    Next Story
    ×