search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காசை கரியாக்காமல் தீபாவளியை இப்படியும் கொண்டாடலாம்: வைரல் வீடியோ
    X

    காசை கரியாக்காமல் தீபாவளியை இப்படியும் கொண்டாடலாம்: வைரல் வீடியோ

    பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை இப்படியும் கொண்டாடலாம் என நடிகர் வருண் ப்ருதி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
    தீபாவளிக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளதால் பட்டாசு, புதுத்துணி, பலகார விற்பனை கடைகளில் களைகட்டி வருகிறது.

    ஒருபுறம் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தினாலும், மறுபுறம் அதில் உள்ள மகிழ்ச்சியே தனிதான் என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் பட்டாசு வெடிக்காமல் இப்படியும் தீபாவளி கொண்டாடலாம் என நடிகர் வருண் ப்ருதி தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் எக்கச்சக்கமான வரவேற்பைப் பெற்று வருகிறது.

    வீடியோவில் வருண் ப்ருதி சில ரூபாய் நோட்டுக்களை கீழே போட்டு எரிக்கிறார். அந்த வழியாக செல்லும் ஒருவர் இதைப் பார்த்து பதறிப்போய் ரூபாய் நோட்டுகளை எரிக்க வேண்டாம் என தடுக்க, ‘இது என்னுடைய பணம் நான் எரிப்பேன்’ என்று வருண் அவருக்கு பதிலளிக்கிறார்.

    நீ என்ன பைத்தியமா? என அவர் கேட்க, அதற்கு வருண் என்ன பதில் கூறினார்? என்பதை வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

    இதுவரை சுமார் 72 லட்சம் பேர் இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வீடியோவைப் பார்க்க:

    This man was burning all his money and then watch

    This man was burning all his money and then Watch what happened. #PleaseShareToSupportHumanity This Diwali please give happiness and let their blessings Light up our Lives #HappyDiwali

    Posted by Varun Pruthi on Tuesday, 25 October 2016
    Next Story
    ×