search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ‘கியான்ட்’ புயலால் ஒடிசா- மேற்கு வங்காளத்தில் கனமழை வாய்ப்பு: தமிழக துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
    X

    ‘கியான்ட்’ புயலால் ஒடிசா- மேற்கு வங்காளத்தில் கனமழை வாய்ப்பு: தமிழக துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

    வங்கக் கடலில் உருவான ‘கியான்ட்’ புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்காளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    சென்னை:

    வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு ‘கியான்ட்’ என பெயரிடப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்திற்கு கிழக்கே 850 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த புயல் வடக்கு மற்றும் வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

    இதன் காரணமாக ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒடிசா, வடக்கு கரையோர ஆந்திரா பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனவே, கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தீபாவளி கொண்டாட்டதிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது.

    இந்நிலையில், ‘கியான்ட்’ புயல் சின்னம் காரணமாக தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை. என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எண்ணூர், கடலுர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட துறைமுகங்களில் இன்று 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    Next Story
    ×