search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டம் நடந்தபோது எடுத்த படம்.

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற 2-ந்தேதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனல் தமிழில் தொடக்கம்

    திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நவம்பர் 2-ந்தேதி ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலை தமிழில் தனியாக தொடங்கி ஆன்மிக நிகழ்ச்சிகளை நேரிடையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    திருப்பதி:

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் திருப்பதியில் உள்ள தேவஸ்தான அலுவலக பவனில் நடந்தது.

    கூட்டத்தில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் சாம்பசிவராவ் கலந்து கொண்டு பேசினார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் அனைத்து ஆன்மிக நிகழ்ச்சிகளும் திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதியில் இருந்து ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலை தமிழில் தனியாக தொடங்கி ஆன்மிக நிகழ்ச்சிகளை நேரிடையாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    பக்தர்கள் வழங்கும் காணிக்கைகள் அனைத்தும் வங்கிகளின் மூலமாக வழங்கலாம். அடுத்த மாதம் கார்த்திகை பவுர்ணமி மனகுடி திருவிழா நடைபெற உள்ளது. அதில் ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள், பஜனை குழுவினர், மண்டல குழுவினர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு சேவை செய்யலாம்.

    திருமலை-திருப்பதி தேவஸ்தானம், அரசுடன் இணைந்து திருப்பதியில் 9 முக்கிய சாலைகளை அழகாக சீரமைத்து வருகிறது. மின் விளக்குகளும் பொருத்தப்படுகிறது.

    அதேபோல் திருமலை - திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான அனைத்துக் கோவில்களிலும் மின் விளக்கு வசதி செய்யப்பட உள்ளது. மின்சாரம் இல்லாத நேரத்தில் ஜெனரேட்டர் வசதியும் செய்யப்படும். கார்த்திகை பிரம்மோற்சவ விழாவை யொட்டி திருச்சானூர், சீனிவாசமங்காபுரம் பகுதியில் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும். என்ஜினீயரிங் துறை சார்பாக நடந்து வரும் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரி போலா.பாஸ்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×