search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படுகிறது
    X

    சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாள் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாடப்படுகிறது

    ‘இரும்பு மனிதர்’ என போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் வருகிற 31–ந்தேதி கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஒருமைப்பாடு தினமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.
    புதுடெல்லி:

    அதன்படி வருகிற 31–ந்தேதி நாடு முழுவதிலும் ‘தேசிய ஒருமைப்பாடு தினம்’ கொண்டாடப்படுகிறது.

    அன்றைய தினத்தை நாட்டின் ஒற்றுமையை வளர்த்து, பலப்படுத்தும் சிறப்பு நாளாக கொண்டாட மத்திய மந்திரிகள் மற்றும் மாநில முதல்–மந்திரிகளை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    மேலும், அவர் அன்றைய தினத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் ‘ஒருமைப்பாடு ஓட்டம்’ நடத்த வேண்டும் எனவும் பரிந்துரைத்து உள்ளார். இதில் சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொள்வதன் மூலம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஒற்றுமையின் செய்தி சென்றடையும் என கூறி உள்ளார்.

    அந்தவகையில் வருகிற 31–ந்தேதி டெல்லியில் நடைபெறும் ஒருமைப்பாடு ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

    Next Story
    ×