search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டம்: சுஷ்மா சுவராஜ் தகவல்
    X

    விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டம்: சுஷ்மா சுவராஜ் தகவல்

    விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.
    புதுடெல்லி:

    விசா நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:

    விசா நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வணிகம் மற்றும் சுற்றுலா துறைகளை மேம்படுத்த விசா நடைமுறைகளை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இரண்டு அரை ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த நேரத்தில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அளவில் புதிய எல்லைகளை தொட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×