search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜாமீனை நீட்டிப்பதற்கு ரூ.200 கோடி- சுப்ரதா ராய்க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    ஜாமீனை நீட்டிப்பதற்கு ரூ.200 கோடி- சுப்ரதா ராய்க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    நிதி முறைகேடு வழக்கில் சுப்ரதா ராயின் ஜாமீனை நீட்டிப்பு செய்ய வேண்டுமானால் அவர் ரூ.200 கோடி கொடுத்து டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் பொதுமக்களிடம் கடன் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாயை சகாரா குழுமம் திரட்டியது.

    அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இது தொடர்பாக சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார்.

    சகாரா குழும நிதி முறை கேடு வழக்கு விசாரணை தற்போது சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. பங்கு தாரர்களுக்கு வட்டியுடன் பணத்தைத் திருப்பிக் கொடுக்க சுப்ரதா ராய் சம்மதித்தார்.

    இதையடுத்து ஒரு குறிப்பிட்ட தொகையை அவர் டெபாசிட் ஆக செலுத்தினார். அதன் பேரில் சுப்ரதா ராய் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது. அபபோது சுப்ரதா ராயின் ஜாமீனை நீட்டிப்பு செய்ய வேண்டுமானால் அவர் ரூ.200 கோடி கொடுத்து டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதை சுப்ரதாராய் ஏற்றுக் கொண்டார். இந்திய பங்கு - பரிவர்த்தனை வாரியமான “செபி” அமைப்பிடம் அவர் ரூ. 200 கோடியை செலுத்தினார். இதையடுத்து சுப்ரதா ராயின் ஜாமீன் நீட்டிப்புக்கு நீதிபதிகள் ஒப்புதல் வழங்கினார்கள்.

    வரும் 2018-ம் ஆண்டு இறுதிக்குள் பங்குதாரர்களுக்கு வழங்க ரூ.12 ஆயிரம் கோடியை ஒப்படைப்பதாகவும் சுப்ரதாராய் சார்பில் கோர்ட்டில் உறுதிமொழி அளிக்கப்பட்டது.

    Next Story
    ×