search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திரைப்படங்களோடு நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் ஏற்றுமதி, இறக்குமதியையும் தடை செய்யுங்கள்: அபே தியால்
    X

    திரைப்படங்களோடு நிறுத்தாமல் பாகிஸ்தானுடன் ஏற்றுமதி, இறக்குமதியையும் தடை செய்யுங்கள்: அபே தியால்

    திரைப்படக் கலைஞர்களோடு நிறுத்திக் கொள்ளாமல் பாகிஸ்தான் நாட்டுடனான ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான அபே தியோல் வலியுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் உரியில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் கலைஞர்கள் 48 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ராஜ்தாக்கரே தலைமையிலான மராட்டிய நவ நிர்மான் சேனா கட்சி மிரட்டல் விடுத்தது. இந்தி படங்களில் நடித்து வரும் பாகிஸ்தான் நடிகர்கள் பவாத்கான் மற்றும் மஹீராகான் ஆகியோரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடு விதித்தனர்.

    இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்திய திரைப்படங்களில் பணியாற்றுவதற்கு தாற்காலிக தடை விதிப்பதாக இந்திய திரைப்படச் சங்கம் கடந்த மாதம் அறிவித்தது.

    இந்நிலையில் பாகிஸ்தான் கலைஞர்களை தடை செய்யும் விவகாரம் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மத்திய மந்திரி பாபுல் சுப்ரியாவின் கருத்து மீண்டும் இந்த விவகாரத்தை முன்னுக்கு கொண்டு வந்துள்ளது.

    இந்த விவகாரம் குறித்து இன்று பல்வேறு கலைஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தி திரைப்பட நடிகரும் தயாரிப்பாளருமான அபே தியோல் கூறுகையில்:-

    உங்களுக்கு பாகிஸ்தானுடன் தடை செய்ய விரும்பினால். திரைப்படத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாதீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி அனைத்தையும் தடை செய்யுங்கள்.

    பாகிஸ்தானுடன் ஏதாவது தடை செய்தால் அது நமது ராணுவ வீரர்களுக்கு உதவும் எனில் நான் இதனை ஆதரிப்பேன்.

    நீங்கள் பாதி வேலை மட்டும் செய்தால் அதனை யாரும் தீவிரமாக எடுத்துக் கொள்ள போவதில்லை. அரசாங்கம் சொல்வதை தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.

    இது குறித்து நடிகர் இம்ரான் கான் கூறுகையில்:-

    என்னிடம் சொல்வதற்கு நிறைய கருத்துக்கள் உள்ளன. என்னுடைய கவலை என்னவென்றால், நான் கருத்துக்களை பேசினால் மக்கள் என்னுடைய வீட்டை கொளுத்தி விடுவார்கள்.

    நான் அடி வாங்கவோ அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாகவோ விரும்பவில்லை. என்னுடைய கருத்துக்களை எனக்குள்ளாகவே வைத்துக் கொள்வேன்.

    இவ்வாறு தெரிவித்தார்.
    Next Story
    ×