search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குளிர்கால கூட்டத்தொடர்: பாராளுமன்றம் நவம்பர் 12-ந்தேதி கூடுகிறது
    X

    குளிர்கால கூட்டத்தொடர்: பாராளுமன்றம் நவம்பர் 12-ந்தேதி கூடுகிறது

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் 12-ந்தேதி கூடுகிறது. டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான இதர மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.
    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 12-ந்தேதி கூடுகிறது.

    பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டும், மத்திய பட்ஜெட்டும் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இனி ஒரே பட்ஜெட்டாக மத்திய பட்ஜெட் மட்டும் தாக்கல் செய்யப்படுவதால் பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலை மாற்றி அமைக்கும் படி நிதி மந்திரி அருண் ஜெட்லி சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு கடிதம் எழுதினார்.

    இதைத் தொடர்ந்து பாராளுமன்ற நிகழ்ச்சி நிரல் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வருகிற நவம்பர் மாதம் 12-ந்தேதி கூடுகிறது. டிசம்பர் 12-ந்தேதி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பான இதர மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன.

    2017-ல் ஜனவரி 12-ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும். இனி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1-ந்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

    ஒரு மாதம் நடைபெறும் கூட்டத்தொடருக்கு பின் 2-வது கட்டமாக மார்ச் 12-ந்தேதி பாராளுமன்றம் கூடி மார்ச் 31-ந்தேதி வரை நடைபெறும்.

    மாற்றி அமைக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி நிரல் மத்திய மந்திரி சபையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அமல்படுத்தப்படும்.
    Next Story
    ×