search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராணுவ தாக்குதலால் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பு கருதி பஞ்சாப் பகுதி கிராம மக்கள் வெளியேற்றம்
    X

    ராணுவ தாக்குதலால் எல்லையில் பதற்றம்: பாதுகாப்பு கருதி பஞ்சாப் பகுதி கிராம மக்கள் வெளியேற்றம்

    இந்திய ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
    புதுடெல்லி:

    உரியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் நுழைந்து தாக்குதல்கள் நடத்தி 18 வீரர்களை கொன்று குவித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து, எல்லைப் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்திய விமானப்படை, தரைப்படையை இணைத்து நள்ளிரவு அதிரடி தாக்குதல் நடத்தியது.

    இந்த தாக்குதலில் 7 தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

    இந்திய ராணுவத்தின் தாக்குதலை தொடர்ந்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால், பாகிஸ்தான் எல்லையில் உள்ள பஞ்சாப் கிராம மக்கள் பாதுகாப்பு படையினரால் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    எல்லையை ஒட்டியுள்ள அட்டாரி, பதான்கோட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

    மேலும், எல்லைக்கு அருகேயுள்ள பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×