search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை
    X

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கிச் சூடு: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

    காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் உரியில் நடந்த தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ளது.

    காஷ்மீரில் உற்பத்தியாகும் சிந்து மற்றும் அதன் கிளை நதிகளில் ஓடும் தண்ணீரை பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தத்தை ரத்து செய்யவும், இந்தியாவின் நம்பிக்கைக்கு உரிய நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தானை நீக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

    அடுத்த கட்டமாக பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் வருகிற நவம்பர் மாதம் 9, 10-ந்தேதிகளில் நடைபெறுவதாக இருந்த சார்க் நாடுகள் மாநாட்டை புறக்கணிப்பதாக இந்தியா அறிவித்தது. இதில் இந்தியாவுக்கு ஆதரவாக பூடான், ஆப்கானிஸ்தான், வங்காள தேசமும் புறக்கணிப்பதாக அறிவித்ததால் மாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.

    இதனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் முற்றுகிறது. மேலும் பாகிஸ்தான் ராணுவ மந்திரி கவாஜா ஆசிப் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் எந்த நாடும் எங்கள் மீது போரை திணித்தால் அந்த நாட்டை நாங்கள் அழிப்போம். தேவைப்பட்டால் அணுகுண்டை பயன்படுத்தி இந்தியாவை அழிப்போம் என்று மிரட்டல் விடுத்து கூறினார்.

    இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறலில் ஈடுபட்டு துப்பாக்கியால் சுட்டது. நேற்று முதல் அவ்வப்போது இந்திய நிலைகளைக் குறிவைத்து இந்த தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. 2 நாட்களாக நடக்கும் இந்த தாக்குதலால் எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படைகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி டெல்லியில் மத்திய மந்திரிசபையின் பாதுகாப்பு விவகார கமிட்டி கூட்டத்தை கூட்டினார்.

    இதில் பாகிஸ்தான் படைகள் துப்பாக்கி சூடு மற்றும் எல்லைப் பகுதி நிலவரம் குறித்தும் தகுந்த பதிலடி கொடுப்பது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
    Next Story
    ×