search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரி விவகாரம்: உமாபாரதி தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது-சித்தராமையா பங்கேற்பு
    X

    காவிரி விவகாரம்: உமாபாரதி தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது-சித்தராமையா பங்கேற்பு

    காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் இன்று உமாபாரதி தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பங்கேற்றார்.
    புதுடெல்லி:

    காவிரி நீர் பிரச்சினையில் கூட்டாட்சி தத்துவத்தை மதித்து மத்திய அரசு ஏற்பாடு செய்யும் கூட்டத்தில் இருமாநில அரசு அதிகாரிகளும் பங்கேற்று சுமூகத்தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தமிழக- கர்நாடக முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது.

    அதன்படி டெல்லியில் இன்று மத்திய நீர்வளத்துறை மந்திரி உமாபாரதி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழகம் சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தலைமை செயலாளர் ராமமோகன்ராவ், பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் ஆர்.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

    கர்நாடகம் தரப்பில் முதலமைச்சர் சித்தராமையா, தலைமை செயலாளர் அரவிந்த் ஜாதவ், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில், காவிரியில் நீர் திறக்க மறுப்பது கர்நாடகம் விளக்கம் அளித்தது. அப்போது இரு மாநில அரசுகள் சார்பிலும் பங்கேற்ற அதிகாரிகள் தங்கள் தரப்பு கோரிக்கைகள் மற்றும் தண்ணீர் தேவை குறித்து விளக்கம் அளித்தனர். இதையடுத்து காவிரி நீர் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழகத்திற்கு காவிரி நீரை கர்நாடக அரசு திறக்கவில்லை. தண்ணீர் திறப்பதா வேண்டாமா? என்பது குறித்து இன்றைய ஆலோசனைக்கூட்டத்திற்கு பிறகு முடிவு செய்யப்படும் என சித்தராமையா கூறியிருந்தார். எனவே, இந்த கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
    Next Story
    ×