search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உத்தரபிரதேச மந்திரிகள் அனைவரும் கிரிமினல்களுக்கு ஆதரவாக உள்ளனர்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு
    X

    உத்தரபிரதேச மந்திரிகள் அனைவரும் கிரிமினல்களுக்கு ஆதரவாக உள்ளனர்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

    உத்தரபிரதேச மந்திரிகள் அனைவரும் கிரிமினல்களுக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் உள்ளனர் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

    அங்கு கணிசமான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அவர் விவசாயிகளை சந்தித்து பேசி ஆதரவு திரட்டி வருகிறார்.

    நேற்று ராகுல்காந்தி ரோகில்கந்த் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    உத்தரபிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்கு சீர் குலைந்து காணப்படுகிறது. ஆளும் சமாஜ்வாதி கட்சி பஞ்சரான சைக்கிள் ஆகி விட்டது. அவர்களால் உத்தரபிரதேசத்தை இனி காப்பாற்ற முடியாது.

    சமீபகாலமாக உத்தரபிரதேசத்தில் கிரிமினல்கள் அதிக அளவில் தலையெடுத்து விட்டனர். இங்குள்ள கூலிப்படைகளை மேல்மட்டங்களில் உள்ளவர்களே வளர்த்து விட்டுள்ளனர்.

    மந்திரிகள் அனைவரும் கிரிமினல்களுக்கு பக்கபலமாகவும் ஆதரவாகவும் உள்ளனர். அரசியல்வாதிகள் பின்னணியில் இருப்பதால் தான் இங்கு கிரிமினல்களை ஒடுக்க முடியவில்லை.

    உத்தரபிரதேசத்தில் தற்போது ஜனநாயக ஆட்சி நடக்கவில்லை. காட்டாட்சி நடக்கிறது. சமாஜ்வாதியின் சைக்கிள் டயர் ரிப்பேராகி நின்று விட்டது.

    சைக்கிள் நகரவே இல்லை. இப்படி இருந்தால் உத்தரபிரதேசம் எப்படி விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியும். இங்கு அனைத்துத்துறைகளும் வளர்ச்சி இல்லாமல் முடங்கியுள்ளன.

    இவ்வாறு ராகுல்காந்தி பேசினார்.

    மாணவர்கள் மத்தியில் பேசி முடித்த பிறகு அலஹசரத் தர்காவுக்கு சென்றார். அங்கு இஸ்லாமியர்கள் மத்தியில் பேசினார்.

    அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கிப் பேசினார். பிரதமர் மோடி ஏழை-எளியவர்களை மறந்து விட்டார். அவர் தொழில் அதிபர்களுடன் மட்டுமே பேசுகிறார் என்றார்.
    Next Story
    ×