search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரேத பரிசோதனை விவகாரம்: ராம்குமாரின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு
    X

    பிரேத பரிசோதனை விவகாரம்: ராம்குமாரின் தந்தை உச்சநீதிமன்றத்தில் மனு

    ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் அவரது தந்தை உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந்தேதி புழல் சிறையில் மின்சார வயரை கடித்து தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில், தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரை இடம் பெறச்செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராம்குமாரின் தந்தை பரமசிவம் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தனியார் ஆஸ்பத்திரி டாக்டருக்கு பதில், அரசு ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரை கூடுதலாக நியமித்து உத்தரவிட்டார்.

    இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பரமசிவம் மேல்முறையீடு செய்தார். பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவரை அனுமதிப்பது குறித்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் கால அவகாசம் கேட்டு ராம்குமார் தந்தை மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி என்.கிருபாகரன், ராம்குமார் உடலை செப்டம்பர் 30-ம் தேதி வரை ராயப்பேட்டை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இந்நிலையில், ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரத்தில் அவரது தந்தை உச்சநீதிமன்றத்தில் இன்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
    Next Story
    ×