search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.5 கோடி கமி‌ஷன் கேட்டு மிரட்டுவதாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ மீது லஞ்ச புகார்
    X

    ரூ.5 கோடி கமி‌ஷன் கேட்டு மிரட்டுவதாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ மீது லஞ்ச புகார்

    காண்டிராக்டரிடம் ரூ.5 கோடி கேட்டதாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ மீது லஞ்ச புகார் செல்போனில் மிரட்டிய ஆடியோவை வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
    நகரி:

    ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஒகுலவாரிபள்ளி- கிருஷ்ண பட்டினம் இடையே ரெயில்வே தண்டவாளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை செய்ய குஜராத்தை சேர்ந்த மான்டே கார்லோ என்ற நிறுவனம் காண்டிராக்ட் எடுத்து இருக்கிறது. இப்பணியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.

    இந்த நிலையில் வெங்கடதிரி தொகுதி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ ராம கிருஷ்ணா, தங்களிடம் ரூ.5 கோடி கமி‌ஷன் கேட்டு மிரட்டுவதாக குஜராத் நிறுவனத்தின் செயலாளர் கல்பேஷ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் நிருபர்களை சந்தித்து பேசினார். அப்போது ராமகிருஷ்ணா எம்.எல்.ஏ மான்டே கார்லோ நிறுவனத்தின் மேலாளர் ராமுவிடம் செல்போனில் பணம் கேட்டு மிரட்டிய ஆடியோ வெளியிடப்பட்டது.

    அதில் பேசிய ராம கிருஷ்ணா எம்.எல்.ஏ, உங்களுக்கு (குஜராத் நிறுவனம்) குறைந்த விலையில் காண்டிராக்ட் வாங்கி கொடுத்து இருக்கிறேன். இதனால் ரூ.5 கோடி கமி‌ஷன் தர வேண்டும். அதுவரை பணியை செய்ய விடாமல் எங்கள் ஆட்கள் தடுப்பார்கள் என்று கூறுகிறார்.

    அதற்கு பதில் கூறும் மேலாளர் ராமு, வெள்ளிக்கிழமை அன்று நிறுவனத்தின் அதிகாரிகள் வருகிறார்கள். அவர்களிடம் பேசி முடிவு எடுக்கலாம். அதுவரை பணியை செய்ய அனுமதியுங்கள் தொழிலாளர்கள் மீது தாக்குதலை நிறுத்துங்கள் என்று கெஞ்சுகிறார். இவ்வாறு அவர்களது பேச்சு செல்கிறது. இந்த விவகாரம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
    Next Story
    ×