search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம்: துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி நைஜீரியா சென்றார்
    X

    ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம்: துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி நைஜீரியா சென்றார்

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி இன்று நைஜீரியா புறப்பட்டுச் சென்றார்.
    புதுடெல்லி:

    மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 5 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி இன்று நைஜீரியா புறப்பட்டுச் சென்றார்.

    நைஜீரியாவின் துணை அதிபர் யெமி ஓசின்பஜோவின் அழைப்பை ஏற்று முதல் முறையாக அந்நாட்டுக்கு செல்லும் ஹமீது அன்சாரி தலைநகர் அபுஜாவில் அதிபர் முகமது புகாரி, துணை அதிபர் யெமி ஓசின்பஜோ உள்ளிட்டோரை சந்தித்து பேசுகிறார்.

    பின்னர் அங்குள்ள ராணுவ கல்லூரியில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அதனை தொடர்ந்து அபுஜாவில் இந்திய தூதரக கட்டித்தை திறந்துவைக்கிறார்.

    நைஜீரியாவில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 29-ந் தேதி மாலி நாட்டிற்கு புறப்பட்டு செல்கிறார். இந்தியாவின் உயர் மட்டத்தலைவர் ஒருவர் அந்நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறையாகும்.

    அங்கு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேசும் ஹமீது அன்சாரி அந்நாட்டின் பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த பயணத்தின் போது இருநாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு உறவை பலப்படுத்துவது குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    ஹமீது அன்சாரியுடன் அவரது மனைவி சல்மா அன்சாரி, நிதித்துறை இணை மந்திரி அர்ஜூன் ராம் மேக்வால், 4 எம்.பி.க்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் சென்றனர். 
    Next Story
    ×