search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி, மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு: புனே நகரில் 25 லட்சம் பேர் பேரணி
    X

    கற்பழித்துக் கொல்லப்பட்ட பெண்ணுக்கு நீதி, மராட்டியர்களுக்கு இட ஒதுக்கீடு: புனே நகரில் 25 லட்சம் பேர் பேரணி

    மராட்டிய மாநிலத்தில் சமீபத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட மராட்டியப் பெண்ணின் மரணத்துக்கு நீதி கேட்டும், மராட்டிய இன மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் உரிய இட ஒதுக்கீடு கோரியும் புனே நகரில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பேரணியில் சுமார் 25 லட்சம் மக்கள் பங்கேற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
    மும்பை:

    கிராந்தி மராத்தா மோர்ச்சா என்ற அமைப்பால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த பேரணி, புனே நகரில் உள்ள கன்டோஜி பாபா சவுக் பகுதியில் இருந்து இன்று காலை சுமார் 10 மணியளவில் தொடங்கி அல்கா சவுக், லக்‌ஷ்மி சாலை, ஸ்டேஷன் சாலை வழியாக வித்பான் பவன் பகுதியை சென்றடைந்தது.

    இங்குள்ள அஹமத்நகர் மாவட்டத்தில் சமீபத்தில் கற்பழித்து கொல்லப்பட்ட மராட்டிய பெண்ணின் மரணத்துக்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் மராட்டிய மக்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், விவசாயம் பொய்த்துப் போனதால் பாதிக்கப்பட்டுள்ள மராட்டிய விவசாயிகளின் துயரத்தை துடைக்க வேண்டும், அரபுக்கடல் பகுதியில் சத்ரபதி சிவாஜிக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்ட இன்றைய பேரணியில் இம்மாநிலத்தின் பல பகுதிகளில் வசித்துவரும் மராட்டிய இன மக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்.

    ஏராளமான பெண்கள், கல்லூரி மாணவர்கள் ஆகியோர் இந்த பேரணியில் பங்கேற்பதற்கு வசதியாக பேருந்து மற்றும் உணவு போன்ற ஏற்பாடுகள் அனைத்தும் முறையாக முன்னரே நன்கு திட்டமிட்டு செய்யப்பட்டிருந்ததால் இந்த பேரணியில் இதுவரை வரலாறு கண்டிராதபடி 25 லட்சம் மராட்டிய மக்கள் இன்று கலந்து கொண்டதாக தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக, கருத்து தெரிவித்த கிராந்தி மராத்தா மோர்ச்சா பிரமுகர்கள், இந்தப் பேரணி மராட்டிய மக்களின் உரிமைகளை பாதுகாக்க, அரசியல் சார்பின்றி நடத்தப்பட்ட பேரணியாகும். இதில் அரசியல்வாதிகளுக்கு இடம் அளித்திருந்தால் தற்போது கூடியுள்ள மக்களில் பாதிபேர்கூட வந்திருக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×