search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போபால் போர் நினைவிடத்தை அக். 14-ம் தேதி நாட்டிற்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி
    X

    போபால் போர் நினைவிடத்தை அக். 14-ம் தேதி நாட்டிற்கு அர்பணிக்கிறார் பிரதமர் மோடி

    பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கட்டப்பட்டுள்ள புதிய போர் நினைவிடத்தை வருகின்ற அக்டோபர் 14-ம் தேதி நாட்டிற்கு அர்பணிக்கிறார்.
    போபால்:

    மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகரில் போர் வீரர்களின் நினைவாக புதிய நினைவிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த நினைவிடத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் மாதம் 14-ம் தேதி நாட்டிற்கு திறந்து வைக்கிறார்.

    இது தொடர்பாக மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்.

    இதற்கான போபால் வரும் மோடி அன்றே நடைபெறும் முன்னாள் ராணுவ வீரர்களின் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    இந்த இரண்டு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதற்கு பிரதமர் ஒப்புக் கொண்டுள்ளதாக மக்கள் தொடர்பு துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    போர் வீரர்கள் நினைவிட திறப்பு விழாவிற்கு மத்திய பாதுகாப்பு துறை மந்திரி மனோகர் லால் பாரிக்கர் மற்றும் ராணுவ, கப்பல் மற்றும் விமானத் துறை அதிகாரிகளுக்கும் சிவராஜ் சிங் சவுகான் அழைப்பு விடுத்தார்.
    Next Story
    ×