search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஷ்மீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க முடிவு: எல்லையில் குவியும் பாகிஸ்தான் படைகள்
    X

    காஷ்மீர் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க முடிவு: எல்லையில் குவியும் பாகிஸ்தான் படைகள்

    காஷ்மீரில் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருகிறது.
    புதுடெல்லி:

    காஷ்மீரில் சில நாட்களுக்கு முன் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஸ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் உரி ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.

    இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகளை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தாக்குதல் நடந்த மறுநாளே எல்லையில் ஊடுருவலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தி அழிக்கவும் இந்தியா திட்டமிட்டு உள்ளது. இதற்காக எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

    இந்தியாவின் மிரட்டலால் அச்சம் அடைந்துள்ள பாகிஸ்தான் பல வகையில் இந்தியாவைப்பற்றி அவதூறு பரப்பி வருகிறது. மேலும் சர்வதேச எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே தனது படைகளையும் பாகிஸ்தான் குவித்து வருகிறது.

    காஷ்மீரின் வடக்கு பகுதி நெடுகிலும் படைகளை குவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதே போல் ராஜஸ்தான். மாநிலத்தில் மேற்கு பகுதியிலும் பாகிஸ்தான் படைகளை குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

    நேற்று பிரதமர் மோடி தலைமையில் கடந்த மத்திய மந்திரி சபையின் பாதுகாப்பு விவகாரங்கள் குழு கூட்டத்தில் இது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு விவாதிக்கப்பட்டது. இதில், எல்லையில் நமது படை வீரர்களையும் எல்லைப் பாதுகாப்பு படையினரையும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்துவது என்றும் எந்த தாக்குதலையும் சந்திக்க தயார் நிலையில் இருக்குமாறும் முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக வடக்கு மற்றும் மேற்கு பிராந்திய ராணுவ தலைமையகத்துக்கு உத்தரவு பிறப்பிக்கவும் முடிவு செய்யப்பட்டது.
    Next Story
    ×