search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுத்தமான மாநிலங்களில் சிக்கிம் முதலிடம் - ஜார்க்கண்ட் கடைசி
    X

    சுத்தமான மாநிலங்களில் சிக்கிம் முதலிடம் - ஜார்க்கண்ட் கடைசி

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் சுத்தத்தில் சிறப்பாக உள்ளது என்று சமீபத்தில் நடத்திய ஆய்வில் சிக்கிம் மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. ஜார்க்கண்ட் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் எந்த மாநிலம் சுத்தத்தில் சிறப்பாக உள்ளது என்று சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

    கிராமப் பகுதிகளில் உள்ள கழிவறைகளின் நிலை மற்றும் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து இந்த ஆய்வு நடந்தது. நேற்று அந்த ஆய்வு குழுவை டெல்லியில் மத்திய ஊரக மேம்பாட்டு மந்திரி நரேந்திர சிங் தோமர் வெளியிட்டார்.

    சுத்தமான மாநிலங்கள் வரிசையில் சிக்கிம் மாநிலம் முதல் இடம் பிடித்துள்ளது. அங்குள்ள கிராமங்களில் 98.2 சதவீதம் கழிவறை வசதிகள் இருப்பதாகவும், அதை கிராம மக்கள் சுத்தமாக பயன்படுத்துவதும் தெரிய வந்துள்ளது. 96.4 சதவீதம் கழிவறை வசதிகளுடன் கேரளா 2-வது இடத்தில் உள்ளது.

    மிசோரம், இமாச்சல பிரதேசம், நாகலாந்து, அரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், மேகாலயா ஆகிய மாநிலங்கள் டாப் 10 சுத்தமான மாநிலங்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ளன.

    காஷ்மீர், கர்நாடகா அடுத்த இடங்களில் உள்ளன. தமிழ்நாடு 39.2 புள்ளிகளுடன் 13-வது இடத்தில் இருக்கிறது. இந்த பட்டியலில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
    Next Story
    ×