search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் குட்டைப் பாவடை அணிய கூடாது: மத்திய மந்திரி அட்வைஸ்
    X

    இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டினர் குட்டைப் பாவடை அணிய கூடாது: மத்திய மந்திரி அட்வைஸ்

    இந்தயாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குட்டைப் பாவடை அணியாதீர்கள் என்று மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா அறிவுறுத்தியுள்ளார்.
    புதுடெல்லி:

    உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ் மஹாலை பார்வையிட ஆக்ராவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுற்றுலாத்துறையின் மத்திய இணை மந்திரி மகேஷ் சர்மா இந்தியா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்தியாவில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதது பற்றி கூறியுள்ளார்.

    இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இந்தியாவில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதது பற்றிய குறிப்புகள் அடங்கிய வரவேற்பு அட்டை விமான நிலையங்களில் வழங்கப்படும்.

    அவர்கள் சிறிய நகரங்களில் தங்கும்போது, இரவு நேரங்களில் தனியாக வெளியே செல்ல வேண்டாம். குட்டைப் பாவடை போன்ற உடைகள் அணிவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், டாக்சியில் பயணம் செய்தால் அந்த வாகனத்தை செல்போனில் படம்பிடித்து தனது நண்பருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற குறிப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் வரவேற்பு அட்டையில் இடம்பெற்றிருக்கும் என்று அவர் கூறினார்.

    மேலும், பாரம்பரிய கலாச்சாரம் மிக்க இந்தியாவில் உள்ள கோவில்களுக்கு செல்லும் போது உடை நாகரிகம் முக்கியமானதாக உள்ளது. இதுகுறித்தும் அவர்கள் அணியும் உடையில் கவனமாக இருக்க வேண்டும். இதன்மூலம், சுற்றுலாப் பயணிகள் இவ்வாறு தான் உடைகள் அணிய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிடவில்லை. அவர்களின் பாதுகாப்பு நலன் கருதியே கூறுவதாக அவர் தெரிவித்தார்.

    இதுகுறித்து, அரசியல் தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்களின் எதிர்ப்பையும், விமர்சனத்தையும் வெளியிட்டு வருகின்றனர்.

    Next Story
    ×