search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரூ.500 கொடுத்து ஜெயிலுக்கு சென்று வரும் புதிய திட்டம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு
    X

    ரூ.500 கொடுத்து ஜெயிலுக்கு சென்று வரும் புதிய திட்டம்: தெலுங்கானா அரசு அறிவிப்பு

    குற்றம் செய்தால்தான் ஜெயிலுக்குப் போக வேண்டும் என்றில்லை. குற்றம் செய்யாமல் கூட, ஜெயில் எப்படி இருக்கிறது என்பதை ரூ.500 கட்டணம் கொடுத்து அறியும் புதுமையான ஒரு திட்டத்தை தெலுங்கானா மாநில அரசு அறிமுகம் செய்துள்ளது.
    மேடக்:

    தெலுங்கானா மாநிலத்தில் மேடக் மாவட்டத்தில் சங்க ரெட்டி எனும் இடத்தில் மிகப்பழமையான சிறை வளாகம் ஒன்று உள்ளது.

    சுதந்திரப் போராட்ட காலத்தில் நாட்டுக்காக போராடியவர்கள் இங்கு அடைக்கப்பட்டனர். சுதந்திரத்துக்குப் பிறகு அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஜெயிலாக மாறியது.

    இந்த ஜெயிலில் ஒருநாள் முழுக்க இருந்து “ஜெயில் வாழ்க்கை”யை அனுபவிக்க ஆசைப்படுவர்களுக்கு இங்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒருநாள் முழுக்க ஜெயிலுக்குள் இருந்து விட்டு வரலாம்.

    ஜெயிலுக்கு செல்ல ரூ.500 கொடுத்து முன்பதிவு செய்தால் குறிப்பிட்ட தினத்தன்று அழைப்பார்கள். அன்று ஜெயிலுக்கு சென்றதும் சிறை அறைக்குள் அடைத்து விடுவார்கள். கைதிகள் மாதிரியே அவர்கள் நடத்தப்படுவார்கள்.

    கைதிகளுக்கு கொடுக்கப்படுவது போல 3 வேளை உணவு கொடுப்பார்கள். காலை 6 மணிக்கு டீ தருவார்கள். 7.30 மணிக்கு காலை உணவு, 10.30 மணிக்கு மீண்டும் டீ, 12.30 மணிக்கு மதியம் உணவு கொடுப்பார்கள்.

    மாலை 5 மணிக்கு டின்னர் கொடுத்து பிறகு 6 மணிக்கு வெளியில் அனுப்பி விடுவார்கள்.

    ஜெயிலில் இருக்கும் அன்று ஒருநாள் முழுவதும் கைதிகள் அணியும் உடை கொடுக்கப்படும். கைதி மாதிரியே நடத்துவார்கள்.

    விருப்பம் உள்ளவர்கள் மற்ற கைதிகளுடன் சேர்ந்து ஏதாவது வேலை செய்யலாம். தோட்டங்களில் பணி செய்யலாம்.

    அந்த ஜெயிலுக்குள் மியூசியம் ஒன்று உள்ளது. கட்டணம் செலுத்தி அதையும் பார்வையிடலாம். இப்படி ஜெயில் வாழ்க்கையை அனுபவிக்கும் திட்டத்தை நாட்டிலேயே முதன் முறையாக தெலுங்கானா அரசு அறிமுகம் செய்துள்ளது.
    Next Story
    ×