search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் குறித்து அறிய பல்துறை விசாரணைக்குழு: ரகுராம் ராஜன் அறிவிப்பு
    X

    பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் குறித்து அறிய பல்துறை விசாரணைக்குழு: ரகுராம் ராஜன் அறிவிப்பு

    பனாமா பேப்பர்ஸ் ஆவணங்கள் குறித்து பல்துறை விசாரணைக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் புலனாய்வு இதழியலாளர்கள் சர்வதேச கூட்டியக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 'பனாமா பேப்பர்ஸ்' என்ற தலைப்பில் பல்வேறு வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத சொத்துக்கள் குறித்த தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளது.

    அதில், உலகம் முழுவதும் அரசியல் முக்கியஸ்தர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என பிரபலங்கள் பலர் தங்கள் கணக்கில் வராத சொத்துக்களை பனாமா நாட்டில் எவ்வளவு பதுக்கி வைத்திருக்கிறார்கள், எப்படி எல்லாம் வரி ஏய்ப்பு செய்துள்ளார்கள் என்ற தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    உலகம் முழுவதிலும் உள்ள ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்களின் ரகசிய ஆவணங்களும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நாட்டு தலைவர்கள் மற்றும் பிரபரலங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

    இதில், இந்தியாவை சேர்ந்த முக்கிய நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட 500 பேர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்நிலையில், பனாமா பேப்பர்ஸ் வெளியிட்டுள்ள வரி ஏய்ப்பு, சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பான பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியர்களின் தகவல்கள் குறித்து பல்துறை விசாரணைக் குழு ஆய்வு மேற்கொள்ளும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

    மும்பையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்ளை ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மத்திய அரசு அறிவித்துள்ள விசாரணைக் குழுவில் நாங்களும் ஒரு பகுதியாக செயல்படுவோம். வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களின் தன்மை குறித்து அறிவது முக்கியத்துவம் வாய்ந்தது” என்றார்.
    Next Story
    ×