search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மருத்துவக்கல்லூரி விவகாரம்: கலெக்டர் அலுவலகத்தை எம்.எல்.ஏ.- பொதுமக்கள் முற்றுகை
    X

    கரூர் மருத்துவக்கல்லூரி விவகாரம்: கலெக்டர் அலுவலகத்தை எம்.எல்.ஏ.- பொதுமக்கள் முற்றுகை

    கரூர் அருகே மருத்துவக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை எம்.எல்.ஏ. கீதா மற்றும் பொதுமக்கள் முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

    கரூர்:

    கரூர் வாங்கல் குப்புச்சி பாளையத்தில் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட வலியுறுத்தி வருகிற 28-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. அறிவித்தார். இதற்காக போலீசார் அனுமதி அளிக்க கோரி, இன்று மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    மேலும் மருத்துவக்கல்லூரி அமைப்பதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் முட்டுக்கட்டை போடுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இந் நிலையில் கரூர் அருகே காந்தி கிராமத்தில் அரசு மருத் துவக்கல்லூரி அமைக்க வலியுறுத்தி அதே தினம் கரூரில் உண்ணாவிரதம் நடத்திட அனுமதி கோரி கரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். ஆளுங் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள இந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா மற்றும் கரூர் நகர அ.தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் , கரூர் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜூ மற்றும் ஏராளமான பொதுமக்கள் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு கலெக்டரிடம் மனு ஒன்றை கொடுத்தனர்.

    அதில் காந்தி கிராமம்தான் போக்குவரத்து நிறைந்த பகுதி. ரெயில் நிலையம் உள்பட பல்வேறு வசதிகள் உள்ளன. எனவே காந்தி கிராமத்தில்தான் மருத்துவ கல்லூரி அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். முன்னதாக கரூர் கலைக்கல்லூரியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலமாக சென்றனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    Next Story
    ×