search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    அரசு மருத்துவமனை முன்பு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

    ஆரணி அருகே அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    ஆரணி:

    2 ஆண்டுகள் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மருத்துவம் மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 50 சதவீத மாநில இடஒதுக்கீட்டிற்கு ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரிகளில் பணிபுரியும் டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அரசு டாக்டர்களுக்கு ஆதரவு தெரிவித்து இந்திய மருத்துவ சங்க ஆரணி கிளை தலைவர் டாக்டர் எம்.எஸ்.எஸ்.பாஸ்கரன் தலைமையில் ஆரணி அரசு மருத்துவமனை முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க செயலாளர் டாக்டர் சுதாதேவராஜ், பொருளாளர் யோகானந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சங்க முன்னாள் தலைவர் பால்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.வும், டாக்டருமான ஜெய்சன்ஜேக்கப், எஸ்.வாசுதேவன், அரசு டாக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
    Next Story
    ×