search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடைக்கானல் அருகே விவசாயிகளை விரட்டும் ஒற்றை யானை
    X

    கொடைக்கானல் அருகே விவசாயிகளை விரட்டும் ஒற்றை யானை

    கொடைக்கானல் அருகே ஒற்றை யானை விரட்டுவதால் விவசாயிகள் பீதி அடைந்து உள்ளனர்.
    மன்னவனூர்:

    கொடைக்கானல் நகரப் பகுதிகளில் உலா வரும் காட்டு எருமைகள் பொதுமக்களையும் சுற்றுலாப் பயணிகளையும் அச்சுறுத்தி வரும் நிலையில், மற்றொரு முகாமாக காட்டு யானைக் கூட்டங்களால் விவசாயப் பயிர்களும், மனித உயிர்களும் பலியாகி வருகின்றன.

    இதனைத் தொடர்ந்து கொடைக்கானல் அருகே கோம்பை கணேசபுரம் பகுதிகளில் யானைகள் கூட்டமாக முகாமிட்டு அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியும், மனிதர்களை அச்சுறுத்தியும் வருகின்றன. கடந்த 2 நாட்களாக குட்டியுடன் கூடிய யானை ஒன்று பள்ளங்கிக் கோம்பை சாலையில் சுமார் 3 மணி நேரம் முகாமிட்டு அந்தப் பகுதியில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் அந்த வழியாக சென்ற விவசாயிகளை விரட்டியது.

    இது குறித்து மலைகிராம மக்கள் கூறுகையில் தற்போது கூட்டம் கூட்டமாகவும், தனியாகவும், காட்டு யானைகள் நாலாபுறமும் முகாமிட்டு அச்சுறுத்தியும் தோட்டத்தினை சேதப்படுத்தியும் வருகின்றன. வனத்துறையினரிடம் விரட்டுவது குறித்துக் கூறினால் இது பழனி சரகம், பூம்பாறை சரகம் என்றும் எங்களது எல்லை இல்லை என்றும் கூறி யானைக் கூட்டங்களை விரட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர். மாவட்ட நிர்வாகம் எங்களது உயிர்களை அச்சுறுத்தி வரும் யானைக் கூட்டங்களை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்றனர்.
    Next Story
    ×