search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியின் சகோதரர் அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம்
    X

    புதுவையில் சுற்றுப்பயணம்: பிரதமர் மோடியின் சகோதரர் அரவிந்தர் ஆசிரமத்தில் தரிசனம்

    புதுவைக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றி பார்த்து தரிசனம் செய்தனர்.
    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் சகோதரர் பிரகலாத் தாமோதர்தாஸ் மோடி தனது குடும்பத்தினருடன் நேற்று மாலை புதுவை வந்தார். அவரை புதுவை மாநில பாரதிய ஜனதா தலைவர் சாமிநாதன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.

    பின்னர் அவர் புதுவை மணக்குள விநாயகர் கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அங்கு அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் இரவு கவர்னர் மாளிகைக்கு சென்றனர். அங்கு கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேசினர். இரவு கவர்னர் மாளிகையிலேயே தங்கினர்.

    இன்று காலை பிரதமர் மோடியின் சகோதரர் குடும்பத்தினர் அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கு அரவிந்தர் ஆசிரமத்தை சுற்றி பார்த்து தரிசனம் செய்தனர். பின்னர் அரவிந்தர் மற்றும் அன்னை சமாதி முன்பு அமர்ந்து தியானம் செய்தனர். இதன் பின்னர் சர்வதேச நகரமான ஆரோவிலுக்கு சென்று சுற்றி பார்த்தனர்.
    Next Story
    ×