search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோயம்பேடு-நேருபூங்கா இடையே சுரங்கபாதையில் மெட்ரோ ரெயில் ஒரு வாரத்தில் ஓடும்
    X

    கோயம்பேடு-நேருபூங்கா இடையே சுரங்கபாதையில் மெட்ரோ ரெயில் ஒரு வாரத்தில் ஓடும்

    கோயம்பேடு-நேருபூங்கா இடையே சுரங்கபாதையில் மெட்ரோ ரெயில் ஒரு வாரத்தில் தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2 கட்டங்களாக நிறைவேற்றப்படுகிறது. வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் ஒரு வழிதடத்திலும், சென்ட்ரல்- கோயம்பேடு- பரங்கமலை வரை மற்றொரு பாதையிலும் மெட்ரோ ரெயில் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.

    ஏற்கனவே கோயம்பேடு-பரங்கிமலை இடையே மேல்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி நடந்து வருகிறது. கோயம்பேடு - நேருபூங்கா இடையே சுரங்கபாதை மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

    திருமங்கலம், செனாய் நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்பாக்கம் வழியாக நேரு பூங்கா வரை சோதனை ஓட்டம் நடந்து முடிந்தது. இதையொட்டி பாதுகாப்பு சோதனை கடந்த வாரம் நடந்தது. மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் மனோகரன், கோயம்பேடு - நேரு பூங்கா வரையில் சுரங்க பாதையில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    பயணிகள் பாதுகாப்பு, விபத்து மற்றம் அவசரகால நேரத்தில் பயணிகள் வெளியேறுவதற்கான வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்பித்தார். சுரங்க பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கலாம் என ஒப்புதல் அளித்தார்.

    அதை தொடர்ந்து முதல் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க தயாராக உள்ளது. இந்த சேவை தொடங்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் தமிழக அரசின் அனுமதியை கேட்டுள்ளது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோரின் ஒப்பு தல் பெற்று குறிப்பிடப்படும் தேதியில் ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தமிழக அரசியலில் அ.தி.மு.க 2 அணிகள் இணைப்பு தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினையால் சுரங்க பாதை ரெயில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து வரும் சில நாட்களில் சுமூகமான சூழ்நிலை உருவாகும் நிலை உள்ளது.

    எனவே ஒரு வாரத்தில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குவதற்கான வாய்ப்பு உள்ளதாக மெட்ரோ ரெயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×