search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது: திருப்பூரை சேர்ந்தவன்
    X

    புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது: திருப்பூரை சேர்ந்தவன்

    புதுவையில் மோட்டார் சைக்கிள் திருடனை போலீசார் கைது செய்து அவனிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை திப்புராயப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் (வயது34), இவர் சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலைபார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று புதுவை கடற்கரைசாலையில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு நடைபயிற்சி மேற்கொண்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணாமல் சுரேஷ் திடுக்கிட்டார். அதனை யாரோ திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்தது சுரேஷ் ஓதியன்சாலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் ஒதியன்சாலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் இன்று அதிகாலை புஸ்சிவீதி- ஆம்பூர்சாலை சந்திப்பில் ரோந்துபணி மேற்கொண்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் சந்தேகப்படும்படி வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரனாக தகவல்கள் கூறியதால் அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த வாலிபர் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியை சேர்ந்த கார்த்திக் (34) என்பதும், அவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருட்டு மோட்டார் சைக்கிள் என்பதும் தெரியவந்தது.

    மேலும் விசாணையில் அந்த மோட்டார் சைக்கிளை புதுவை கடற்கரை சாலையில் திருடியதை அவன் ஓப்புக்கொண்டான். அந்த மோட்டார் சைக்கிள் திப்புராயப்பேட்டையை சேர்ந்த என்ஜினீயர் சுரேசுக்கு சொந்தமானதாகும்.

    இதையடுத்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுபோன்று வேறு எங்கேனும் கைவரிசை காட்டி உள்ளனானா என்பது குறித்து கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×