search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருஷ்ணகிரி தேவாலயங்களில் புனித வெள்ளி பிரார்த்தனை
    X

    கிருஷ்ணகிரி தேவாலயங்களில் புனித வெள்ளி பிரார்த்தனை

    கிருஷ்ணகிரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாகபங்கேற்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரியில் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி நாள் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாகபங்கேற்றனர்.

    மனித குலத்தின் பாவங்களை நீக்க வந்த இயேசு பிரானின் தலையில் முள் முடி தரித்து, கனமான சிலுவையை அவருடைய தோள் மீது சுமத்தி, கசையால் அடித்து ரத்தம் சிந்த, ஜெருசலேம் தெருக்களில் பிலாத்து மன்னனின் தீர்ப்பின்படி ஏசு பிரானை ரோமனிய வீரர்கள் அழைத்து சென்ற நாள் இது. மக்களுக்காக மக்களின் பாவங்களை நீக்க, உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு எதுவும் இல்லை என ஏசு தனது உயிரை சிலுவையில் விட்டதால் இந்த நாள் பெரிய வெள்ளி, நல்ல வெள்ளி, புனித வெள்ளி என்ற கிறிஸ்துவர்களால் அழைக்கப்படுகிறது.

    இந்த தினத்தில் ஏசுவின் தியாகத்தையும், சிறப்பு நிகழ்வுகளையும் நினைவு கொள்ளும் விதமாக கிறஸ்துவ மக்கள் தேவாலங்களில் ஒன்று கூடுவது வழக்கம். இந்நிலையில் கிருஷ்ணகிரியில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி தினம் கடைபிடிக்கப்பட்டது. புனித வெள்ளி தினத்தின் திருச்சடங்குகளை, அன்னை திருத்தல பங்கு தந்தை தேவசகாயம் நடத்தினர். ஏசு பிரான் சிலுவையில் மரித்ததன் அடையாளமாக நிகழ்ச்சியில் சிலுவையை சுமந்தபடி, ஆலய வளாகத்தை வலம் வந்தனர்.

    இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். இதேபோல், கிருஷ்ணகிரி பெங்களூர் சாலையில் உள்ள சிஎஸ்ஐ ஆலயத்திலும் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

    Next Story
    ×