search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு: அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல்
    X

    தமிழகத்தில் 80 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு: அரசு வேலை வாய்ப்பு அலுவலகம் தகவல்

    தமிழ்நாட்டின் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் கடந்த 31.3.2017 வரை 80 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு வேலையை எதிர்பார்த்து பதிவு செய்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.
    சென்னை:

    தமிழ்நாட்டில் படித்து விட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    தமிழ்நாட்டின் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களிலும் கடந்த 31.3.2017 வரை மொத்தம் 81 லட்சத்து 30 ஆயிரத்து 25 பேர் அரசு வேலையை எதிர்பார்த்து பதிவு செய்துள்ளனர்.

    இவர்களில் 3 லட்சத்து 74 ஆயிரத்து 845 பேர் பி.எட் பட்டதாரிகள். 2 லட்சத்து 21 ஆயிரத்து 651 பேர் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள். 2 லட்சத்து 45 ஆயிரத்து 377 பேர் பொறியியல் பட்டதாரிகள்.

    மேலும் 3 லட்சத்து 32 ஆயிரத்து 341 பி.காம் பட்டதாரிகள், 4 லட்சத்து 50 ஆயிரத்து 405 பி.ஏ. பட்டதாரிகள், 6 லட்சத்து 4 ஆயிரத்து 149 பி.எஸ்.சி. பட்டதாரிகள் அரசு வேலைக்காக காத்திருக்கின்றனர்.

    இவர்கள் தவிர 1 லட்சத்து 9 ஆயிரத்து 18 எம்.ஏ. பட்டதாரிகளும், 1 லட்சத்து 24 ஆயிரத்து 937 எம்.எஸ்.சி. பட்டதாரிகளும், 40 ஆயிரத்து 240 எம்.காம் பட்டதாரிகளும் வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு அரசு பணிக்காக காத்திருக்கிறார்கள்.

    மேற்கண்ட விவரங்களை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது.
    Next Story
    ×