search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: கவர்னர் கிரண்பேடி கருத்து
    X

    புதுவையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: கவர்னர் கிரண்பேடி கருத்து

    நகராட்சி ஆணையாளர் விவகாரத்தில் புதுவையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் கவர்னர் கிரண்பேடி கருத்து தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கவர்னர்- அமைச்சரவை இடையிலான மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது. நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரன் சபாநாயகர் உத்தரவை மீறி கவர்னர் உத்தரவை காட்டி மீண்டும் நகராட்சி அலுவலகத்திற்கு வந்து பணியாற்றினார்.

    இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க சபாநாயகர் வைத்திலிங்கம் உத்தரவிட்டார். டி.ஜி.பி. சுனில்கவுதம் இது தொடர்பாக விசாரித்து சபாநாயகரிடம் அறிக்கை சமர்பித்துள்ளார். விரைவில் சபாநாயகர் உத்தரவை மீறியதற்காக சந்திரசேகரனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளார்.

    அதில், அரசியல்கட்சியினர் ஆதரவுடன் தலைமை செயலாளர் அதிகாரி சந்திரசேகரன் மீது வழக்கு பதிவு செய்ய போலீசாருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். எதற்காக இப்படி செய்ய வேண்டும்? நிர்வாகி என்ற முறையில் நான் கொடுத்த உத்தரவின்படி செயல்பட்டவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்க வேண்டும்? தொகுதி எம்.எல்.ஏ. ஒரு அதிகாரியின் பணியை செய்யவிடாமல் தடுத்துள்ளார்.

    இதைப்பற்றிய அதிகாரியின் குற்றச்சாட்டுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை. சந்திரசேகரன் ஏற்கனவே மனமுடைந்துள்ளார். பணிக்கே செல்ல வேண்டாம் என்று கூறும் அளவுக்கு அவர் குடும்பத்தினர் பெரும் பீதியில் உள்ளனர். இதனால் பாதிக்கப்படப் போகிறவர்கள் யார்? மக்கள் நலப்பணிகள் முடங்கும் என ஏன் யாரும் நினைக்கவில்லை? இனி புதுவையை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×