அம்பத்தூரில் பன்றிக்காய்ச்சலுக்கு லேத்பட்டறை அதிபர் பலி

அம்பத்தூரில் பன்றிக்காய்ச்சலுக்கு லேத் பட்டறை அதிபர் பலியானார். பன்றிக்காய்ச்சலுக்கு பலியான ஹரிக்கு ஜெனீபர் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
அம்பத்தூரில் பன்றிக்காய்ச்சலுக்கு லேத்பட்டறை அதிபர் பலி
Published on

வில்லிவாக்கம்:

அம்பத்தூர் ஒரகடம் அய்யன்குளத்தை சேர்ந்தவர் ஹரி (37). இவர் அம்பத்தூர் எஸ்டேட்டில் லேத் பட்டறை நடத்தி வந்தார். கடந்த 5 நாட்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

அதற்காக, வீட்டின் அருகேயுள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். இருந்தும் தொடர்ந்து காய்ச்சலால் அவதிப்பட்டதால் போரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் பரிசோதனை செய்தார். அதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் பாதித்து இருந்தது தெரியவந்தது.

எனவே கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

பன்றிக்காய்ச்சலுக்கு பலியான ஹரிக்கு ஜெனீபர் என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com