search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை: குடிமகன்கள் புகார்
    X

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை: குடிமகன்கள் புகார்

    தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்படுவதாக குடிமகன்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    சேதராப்பட்டு:

    கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டதால் தாகத்தை தணிக்க பொதுமக்கள் குளிர்பானங்கள், பழவகை ஜூஸ்களை அருந்துகின்றனர். அதே வேளையில் குடிமகன்கள் கோடைக்கு ஏற்றவாறு பீர்களை விரும்பி அருந்துகின்றனர். வழக்கமாக பிராந்தி, விஸ்கி, ரம் போன்ற மதுவகைகளை அருந்தும் குடிமகன்கள் கோடை வெப்பத்தை தணிக்க ஜில்லென்று பீர் வகைகளை வாங்கி அருந்துகின்றனர். இதனால் ஒருசில மதுகடைகளில் குறிப்பிட்ட பிராண்டு பீர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே மதுக்கடைகளில் கலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்படுவதாக குடிமகன்கள் புகார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சில மதுகடைகளில் காலாவதியான பீர்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், இதனால் பீர் குடித்த திருப்தியே ஏற்படுவதில்லை என்றும் காலாவதியான பீரினால் ஜலதோ‌ஷம் மற்றும் வியாதிகள் ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.

    மேலும் நெடுஞ்சாலைகளிலும், மாநில நெடுஞ்சாலைகளிலும் உள்ள மதுகடைகளை வருகிற 31-ந்தேதிக்குள் அகற்றி கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்திரவிட்டுள்ளதால் இதனை பயன்படுத்தி பழைய இருப்பில் உள்ள காலாவதியான உற்பத்தி செய்து 2 ஆண்டுகளுக்கும் மேலான பீர்களை விற்பனை செய்வதாக குடிமகன்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுபோல புதுவையில் ஒரு சில மதுகடைகளில் தரமற்ற குறைந்த விலை உள்ள மதுவகைகளை விலை உயர்ந்த மதுவகையில் கலந்து விற்பனை செய்வதாகவும், இதனை அறியாமல் அப்பாவி கூலித்தொழிலாளர்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை சில்லரை விலையில் பெக் கணக்கில் வாங்கி குடித்து ஏமாறுவதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×