search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் 6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது
    X

    தமிழகத்தில் 6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது

    கோவை, கரூர், வேலூர் உள்பட தமிழகத்தில் 6 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் பொதுவாக ஏப்ரல், மே மாதங்களில் கோடைகாலம் தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்க தொடங்கி விடுகிறது. இந்த முறை வடகிழக்கு பருவமழையும் போதிய அளவு பெய்யாத நிலையில் வறட்சியும் தலைவிரித்து ஆடுகிறது.

    வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல், வெயிலின் உக்கிரமும் தற்போது அதிகரிக்க தொடங்கி உள்ளது. நேற்று கோவை, கரூர், வேலூர் உள்பட 6 நகரங்களில் வெயில் அளவு 100 டிகிரியை தாண்டி பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கரூரில் 104 டிகிரி வெயில் பதிவாகி உள்ளது.

    இதை வைத்து பார்க்கும் போது, அடுத்து வரும் ஏப்ரல், மே மாதங்களில் தமிழகத்தில் வெயிலின் கொடுமை மேலும் அதிகரிக்க கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் இருந்து வருகின்றனர்.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:-



    இன்னும் 4 முதல் 5 நாட்கள் வரை தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு என்பது கிடையாது. தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் இந்த முறை அதிகமாக தான் இருக்கும்.

    எதிர்பார்த்தது போல், வெயிலின் தாக்கம் ஏப்ரல், மே மாதங்களில் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கோடை மழை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தற்போது வெயிலின் தாக்கம் கொஞ்சம் குறைவாக தான் இருக்கிறது. அதனால் தான் கோடை மழை இல்லாமல் இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×