search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினாமி அரசினால் அதிகாரிகள் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் திணறுகின்றனர்: தமிழன் பிரசன்னா பேச்சு
    X

    பினாமி அரசினால் அதிகாரிகள் எந்தவித முடிவும் எடுக்க முடியாமல் திணறுகின்றனர்: தமிழன் பிரசன்னா பேச்சு

    தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசினால் அதிகாரிகள் எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர் என்று தமிழன் பிரசன்னா பேசினார்.

    துறையூர்:

    முசிறி கிழக்கு, மேற்கு ஒன்றியங்களின் தி.மு.க. சார்பாக வேங்கை மண்டலத்தில் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். மேற்கு ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். ஒன்றிய பொறுப்பாளர்கள் அப்துல்ரசாக், வெங்கட்ராமன், வசந்தகுமார், உதயகுமார் முன்னிலை வகித்தனர்.

    தெற்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தலைமை கழக பேச்சாளர் முசிறி தமிழ்மன்னன், மாவட்ட பொருளாளர் தர்மன் ராசேந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தலைமை கழக செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    தமிழகத்தில் நடைபெறும் பினாமி அரசினால் அதிகாரிகள் எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். காவல் துறை பினாமி ஆட்சியாளர்களுக்கு அடிமை வேலை பார்த்து பதவி உயர்வு பெற்று விட துடித்துக் கொண்டுள்ளனர். இதனால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

    மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூரில் கும்மாளமிட்டு விட்டு மக்களின் கருத்துக்கு எதிராக பினாமிகளுக்கு ஆதரவளித்து விட்டு தற்போது தொகுதி பக்கம் போக முடியாமல் தலைமறைவாக உள்ளனர். இந்தியாவிலேயே முதன் முதலில் நிதி நிலை அறிக்கையை சமாதியில் வைத்து சட்டசபையில் நிறைவேற்றிய பெருமை இந்த பினாமி அரசுதான். இதனால் அகிலஇந்தியஅளவில் ஏன் உலக அளவில் தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர் .

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவை தலைவர் அம்பி காபதி, துணை செயலாளர் மயில்வாகனன், பொதுகுழு உறுப்பினர் சங்கீதா, பொறுப்பாளர்கள் ரவிசந்திரன், சீதாலட்சுமி, நடராஜன், அய்யாவு, தில்லை வாசகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×