search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்டத்தில் காசநோயை ஒழிக்க ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் காசநோயை ஒழிக்க ரூ.1½ கோடி நிதி ஒதுக்கீடு: கலெக்டர் தகவல்

    நீலகிரி மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பதற்கு ரூ.1 கோடியை 56 லட்சத்து 78 ஆயிரம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது என்று கலெக்டர் சங்கர் கூறினார்.

    ஊட்டி:

    ஊட்டி ரெயில் நிலையத்தில் உலக காசநோய் தினத்தையொட்டி விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை மாவட்ட கலெக்டர் சங்கர் தொடங்கி வைத்தார்.

    உலகை அச்சுறுத்தும் நோய்களில் முதன்மையான ஒன்றாக காசநோய் உள்ளது. எனவே காசநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்த விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை காச நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தால் காச நோய் இல்லாத மாவட்டமாக மாற்றலாம். இதற்காக இந்த நிதியாண்டில் நீலகிரி மாவட்டத்தில் காசநோய் ஒழிப்பதற்கு ரூ.1 கோடியை 56 லட்சத்து 78 ஆயிரம் நிதியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

    இவ்வாறு கலெக்டர் சங்கர் கூறினார்.

    பேரணியில் இணை இயக்குனர் சுகாதாரம் (பணிகள்) டாக்டர்.இரியன் ரவி குமார்,மாவட்ட காசநோய் மைய துணை இயக்குநர் டாக்டர்.எம்.செந்தில் மற்றும் மாவட்ட சுகாதார சங்க பணியாளர்கள், மருத்துவர்கள்,அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து முதற்கட்டமாக காசநோயால் பாதிக்கப்பட்ட 6 பயனாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவு மற்றும் மருந்து மாத்திரைகளை கலெக்டர் சங்கர் வழங்கினார்.

    Next Story
    ×