search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குப்பை தொட்டியில் கிடந்த துண்டு, துண்டாக கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்.
    X
    குப்பை தொட்டியில் கிடந்த துண்டு, துண்டாக கிழிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்.

    குப்பை தொட்டியில் துண்டு, துண்டாக கிடந்த பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள்

    எடப்பாடியில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை துண்டு,துண்டாக கிழித்து குப்பை தொட்டியில் வீசிச்சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம், எடப்பாடியில் அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ பிரிவு கட்டிடத்திற்கு முன்பு குப்பை தொட்டி ஒன்று உள்ளது. நேற்று காலை பள்ளிக்கூடத்திற்கு செல்லும் சில மாணவர்கள் அந்த குப்பை தொட்டியை கிளறி பார்த்தனர். அதில் பழைய ரூ.500, ரூ.1000 மற்றும் 20, 10 ரூபாய் நோட்டுகள் துண்டு, துண்டாக கிழிக்கப்பட்டு குவியலாக கிடந்தது.



    அதை யாரோ சிலர் குப்பை தொட்டியில் வீசிச்சென்று இருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் பரவியதும் சிறிது நேரத்தில் அங்கு கூட்டம் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறு பந்துகள் போன்று அழுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூபாய் நோட்டு துண்டுகளை சிலர் எடுத்துச் செல்ல தொடங்கினர்.

    இதுகுறித்து தகவல் கிடைத்ததும், எடப்பாடி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று கிழித்து துண்டுகளாக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் உண்மையானதா? அல்லது சிறுவர்கள் விளையாடும் காகித நோட்டுகளா? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அந்த ரூபாய் நோட்டு துண்டுகளில் சிலவற்றை சோதனைக்காக போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

    இதுகுறித்து சிலர் கூறும்போது, ‘பக்கத்தில் உள்ள சிமெண்டு அட்டை விற்கும் கடைக்கு லாரியில் கொண்டுவரப்பட்ட சிமெண்டு அட்டைகள் உடையாமல் இருக்க கழிவுநார் பஞ்சுகளுக்கு பதிலாக அடைக்கப்பட்ட காகித தூளில் இந்த ரூபாய் நோட்டு துண்டுகள் வந்திருக்கலாம்’ என்றனர்.

    இதுதொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×