search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் தேர்வு
    X

    இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் தேர்வு

    இந்திய வன அலுவலர் பணி தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த 7 பேர் தேர்வு பெற்றனர்.
    சென்னை:

    மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வுகளுடன், வனத்துறை அலுவலர் (ஐ.எப்.எஸ்.) தேர்வையும் நடத்தி வருகிறது. கடந்த வருடம் 110 வன அலுவலர் (ஐ.எப்.எஸ்.) பணிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் 330 பேர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது.


    இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து கலந்துகொண்டவர்களுக்கு சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் இலவசமாக பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் ஐ.எப்.எஸ். அதிகாரிகள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகள் நடத்தினார்கள். நேர்முகத் தேர்வு கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் மாதம் 16-ந்தேதி வரை நடந்தது. தேர்வு முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது.


    இந்த தேர்வில் 110 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அவர்களில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்த ஆர்.கவுதம், பி.கார்த்திக், எஸ்.ஆனந்த், பி.ஜெகதீசுவரன், பி.சித்தார்த்தா, என்.நந்தகுமார், எம்.இளையராஜா ஆகிய 7 பேர் தேர்வு பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற பி.ஜெகதீசுவரன் செங்கல்பட்டு சப்- கலெக்டர் ஜெயசீலனின் தம்பி ஆவார். ஜெயசீலனும் மனிதநேய மையத்தில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


    சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்று சிவில் சர்வீசஸ் தேர்வு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகள் மற்றும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுகள் ஆகியவற்றை எழுதி 2,831 பேர் தேர்வு பெற்று தேசிய அளவிலும், மாநில அளவிலும் பணியில் உள்ளனர். 
    Next Story
    ×