search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை
    X

    சசிகலாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு: பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்க கோரிக்கை

    அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளராக கடந்த டிசம்பர் 29-ந்தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவரது தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.

    பிறகு அவர் 31-ந்தேதி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்திற்கு வந்து பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்றார். இது தொடர்பாக தேர்தல் கமி‌ஷனுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி முதல்- அமைச்சர் பதவியில் இருந்து விலகிய ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வில் தனி அணி உருவானது. அந்த அணியினர் சசிகலாவை கடுமையாக எதிர்த்து வருகிறார்கள்.

    ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ள 12 எம்.பி.க்கள் டெல்லி சென்று தலைமை தேர்தல் அலுவலகத்தில் சசிகலாவுக்கு எதிராக மனு கொடுத்தனர். சசிகலா அ.தி.மு.க. சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படவில்லை என்றும் எனவே அவரது நியமனம் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவரால் செய்யப்பட்ட புதிய நியமனங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தங்கள் மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதையடுத்து சசிகலாவுக்கு தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியது. பிப்ரவரி மாதம் 2, 15 மற்றும் 17-ந்தேதிகளில் மூன்று தடவை தேர்தல் கமி‌ஷன் சசிகலாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தது. சசிகலா தரப்பிலும் தேர்தல் கமிஷனுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நீடிப்பதற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இம்மனுவை சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் வழக்கு தாக்கல் செய்தார்.

    இம்மனுவை சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தைச் சேர்ந்த செந்தில் ஆறுமுகம் வழக்கு தாக்கல் செய்தார். ”ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா ஆளும் கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். கட்சி வேட்பாளர்களுக்கான படிவங்களில் கையெழுத்து போடும் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிக்கிறார்.தமிழகத்தில் மறைமுகமாக ஆட்சி நடத்தி வருகிறார். அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும்” என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

    முன்னதாக சசிகலாவுக்கு எதிராக சட்ட பஞ்சாயத்து இயக்கமும் தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×