search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி நியூட்ரினோ திட்டம்: மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
    X

    தேனி நியூட்ரினோ திட்டம்: மத்திய அரசின் அனுமதியை ரத்து செய்து பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

    தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு மத்திய அரசு வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்து​ பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
    சென்னை:

    தேனி மாவட்டம் பொட்டிபுரம் மலைப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதியளித்தது. சுமார் ரூ.1,500 கோடியிலான இந்த திட்டத்தில் 1,300 மீட்டர் ஆழத்தில் குகை அமைக்கப்பட்டு அதில் ஆய்வகங்கள் அமைப்பதாகும்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அனுமதியை ரத்து செய்யக் கோரியும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் சார்பில் கடந்த 2015ம் ஆண்டு தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய தடையில்லா சான்றிதழை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் பதிலளிக்க
    உத்தரவிடப்பட்டது.

    இதனையடுத்து நியூட்ரினோ திட்டம் குறித்து ஆய்வு செய்ய 7 பேர் கொண்ட குழுவை மாசுக்காட்டுப்பாட்டு வாரியம் நியமித்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு, இன்று (மார்ச் 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய சுற்றுச்சூல் துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்து தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் அதிரடியாக உத்தரவு பிறபித்தது.
    Next Story
    ×