search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடிநீர் கேட்டு பெண்கள் கோ‌ஷம்: கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகை
    X

    குடிநீர் கேட்டு பெண்கள் கோ‌ஷம்: கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் முற்றுகை

    திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிட்டனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவிவரும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடால் ஒவ்வொரு வாரமும் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் காலிக்குடங்களுடன் பெண்கள் முற்றுகையிடுவது தொடர் கதையாகி வருகிறது. இன்று உடையகுளம் பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

    அவர்கள் தெரிவிக்கையில், கடந்த 2 மாதமாக எங்கள் ஊரில் குடிநீர் வழங்கவில்லை. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தனர். பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.

    இதே போல் திண்டுக்கல் அருகில் உள்ள தேவிநாயக்கன்பட்டி, தலையூத்துப்பட்டி, கணவாய்பட்டி, குட்டம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கருமலை அடிவாரத்தில் இந்திய நில அறிவியல்துறை சார்பாக நிலத்தடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது பட்டா நிலங்களிலும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து விசாரித்ததில் செம்பு, காரியம், துத்தநாகம் போன்ற கணிமவள ஆய்வு நடந்ததாக தெரியவந்துள்ளது. விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதியில் கனிம வள ஆய்வு மேற்கொண்டால் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன் விவசாயமும் பாதிக்கப்படும்.

    எனவே விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×