search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டம்-ஒழுங்குக்கு இடையூறாக இருப்பவர்களை முற்றிலும் ஒடுக்குவோம்: நாராயணசாமி
    X

    சட்டம்-ஒழுங்குக்கு இடையூறாக இருப்பவர்களை முற்றிலும் ஒடுக்குவோம்: நாராயணசாமி

    புதுச்சேரி மாநிலத்தில் சட்டம் - ஒழுங்குக்கு இடையூறாக இருப்பவர்களை முற்றிலும் ஒடுக்குவோம் என முதலமைச்சர் நாராயணசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட போலீசாரின் பயிற்சி நிறைவு விழா கோரிமேடு மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

    புதுவை போலீசாரின் சிறப்பான செயல்பாட்டினால் புதுவை அமைதி பூங்காவாக திகழ்ந்து வருகிறது.

    இப்போது புதிய போலீசார் தேர்வு செய்யப்பட்டு சிறந்த பயிற்சியை பெற்றுள்ளனர். இதில், புதுவை மாநிலம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.

    கடந்த 8 மாதத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாக உள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் இங்கு சட்டம்- ஒழுங்கு சரியில்லாமல் இருந்ததால் தொழில் அதிபர்கள் தங்கள் தொழிற்சாலைகளை மூடி விட்டு வெளியேறினார்கள்.

    இப்போது சட்டம்- ஒழுங்கு மேம்பட்டு இருப்பதால் தொழில் அதிபர்கள் தொழில் தொடங்க தானாக முன் வருகிறார்கள்.


    இப்போது தொழில் அதிபர்களை ரவுடிகள் மிரட்டுவது நின்று இருக்கிறது. ஆனாலும், ஒரு சில புல்லுருவிகள் இருந்து கொண்டு தொல்லை கொடுக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முற்றிலும் ஒடுக்குவோம்.

    தற்போது 303 போலீசார் தேர்வாகி பயிற்சி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும். போலீசுக்கு என்று ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. இதை தவறாக பயன்படுத்தாமல் பாரபட்சம் இல்லாமல் நடக்க வேண்டும்.

    98 பெண் போலீசார் இதில் தேர்வாகி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பாலியல் குற்றங்களை தடுக்க அவர்கள் முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×